திங்கள், 1 பிப்ரவரி, 2010

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக நிறைவுசெய்யுமாறு ஜப்பான் வலியுறுத்தல்..!!

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக நிறைவுசெய்யுமாறு ஜப்பான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜப்பான் கேட்டுள்ளது. இந்த நோக்கங்களில் இலங்கை அரசு வெற்றியடைவதற்கான முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒக்கோடா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதை ஜப்பான் வாழ்த்துகிறது. கடந்த அக்டோபரிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை இலங்கை அரசு துரிதப்படுத்துமென ஜப்பான் கருதுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப இலங்கை மக்கள் ஒன்றிணைவார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை அரசு உறுதியாகவும் விரைவாகவும் தேசிய மீள்நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று ஜப்பான் எதிர்பார்க்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக