புதன், 17 பிப்ரவரி, 2010

தனுக திலகரட்னவின் தாயார் புலனாய்வு பொலிஸாரால் கைது

ஜெனரல் சரத்பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரட்னவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தனுகவின் தாயார் திருமதி அசோக திலகரட்ன இன்று புலனாய்வு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். தனுகவின் தாயாரான அசோக திலகரட்னவின் வங்கி வைப்பகத்தில் 75 மில்லியன் ரூபாய்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து அவர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாத் ஜயக்கொடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக