புதன், 17 பிப்ரவரி, 2010

தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து இரண்டு முக்கியஸ்தர்கள் நீக்கம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து இரண்டு முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி கொள்கைகளுக்கு முரணான வகையில் தனித்து சுயாதீனமாக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினாலேயே குறித்த இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ் தேசியகூட்டமைப்பு அறிவி;த்துள்ளது. குறித்த இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமான ரெலோ கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக