வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மூவர்மீது குற்றச்சாட்டு..!

புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டார்கள் என மூன்று தமிழர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இவ்வழக்கில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான அருணன் விநாயகமூர்த்தி, ஆறுமுகம் ரஜீவன் மற்றம் செல்வராஜா யாதவன் ஆகியோரே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். விக்டோரிய உயர்நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்ற போது அரசதரப்பு சட்டத்தரணி குறித்த மூவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இவர்கள் மூவரும் புலிகளுக்கு மலேசிய வங்கியொன்றின் மூலம் 1கோடியே 30லட்சம் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட மூவரில் ஒருவரின் வீட்டில் மீட்கப்பட்ட வீடியோகாட்சி மூலம் குற்றம் சுமத்தப்பட்ட இருவர் புலிகளின் படகொன்றில் பயணித்தமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குற்றஞ் சாட்டியுள்ளார். எனவே இம்மூவரும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கே இறுதியாக உதவியுள்ளனர் என்றும் இவர்கள் மூவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கிய புலிகளின் சிரேஸ்ட அலுவலக பங்காளர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக