வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எதிர்வரும் 10ம் திகதி ரி.எம்.வி.பி ஜனாதிபதி சந்திப்பு..!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அசாத் மௌலான கருத்துத் தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் தனது தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது, இந்தவகையில் ரி.எம்.பி.வியினராகிய எமது கட்சி அரசாங்கத்தின் ஒரு முக்கிய பங்காளிக் கட்சியாக இருக்கின்றபடியினால் எமக்கான அழைப்பு எதிர்வரும் 10ம்திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது எமது நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படும். அத்துடன் எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பிலும் அரச தரப்பிடம் தெளிவுபடுத்த தயாராகவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக