சனி, 3 அக்டோபர், 2009

வவுனியா அரசஅதிபர் தலைமையில் இன்று வவுனியா நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல்.. புளொட் உறுப்பினர்களும் பங்கேற்பு

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் இன்று வவுனியா நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் வவுனியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பிலான மும்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தனர். இதற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாத போதிலும் நகரசபை உறுப்பினர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து இவ்விடயத்திற்கான இணக்கப்பாட்டினை தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிகழ்வு வவுனியா அரச அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர் மற்றும் விநோநோகராதலிங்கம் ஆகியோரும் வவுனியா நகரசபையின் தலைவர் உபதலைவர் மற்றும் வவுனியா நகரசபையின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உறுப்பினரும் நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) நகரசபை உறுப்பினர்களான குமாரசுவாமி, பார்த்தீபன் ஆகியோரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் முக்கியஸ்தர்களும் பங்குபற்றியிருந்தனர். இங்கு உரையாற்றிய வவுனிநா நகரசபையின் முன்னாள் நகரபிதா ஜி.ரி லிங்கநாதன், வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம், எத்தகைய பணிகள் மிகவும் அவசியமானவையாக உள்ளன என்பது குறித்த விளக்கமொன்றினையும் எடுத்துக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக