வெள்ளி, 22 ஜனவரி, 2010

மன்னார் முருங்கன் நகரில் புளொட் அலுவலகம் திறந்துவைப்பு..!!

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் அலுவலகம் இன்றையதினம் முருங்கன் நகரில் தலைவர் சித்தார்த்தனால் திறந்துவைப்பு. இவ் வைபவத்தில் தொழிற்சங்கங்கள், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முன்னைநாள் மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்;னைநாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக த.சித்தார்தன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில், கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் பவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் நிர்வாக செயலர் தோழர் ராகவன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவசம்பு உட்பட மேலும் பல கட்சி முக்கியஸ்தர்களும் அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கழகத்தின் முன்னைநாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக