வெள்ளி, 22 ஜனவரி, 2010
ஜெனரல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ஒருபோதும் ஜனாதிபதி பதவியை கைவிடமாட்டார்.. -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..!!
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ஒருநாளும் பதவியை கைவிட மாட்டார் என சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரலாற்றுக்காலம் முதல் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இராணுவத் தலைவர்கள் எவரும் முறையாக பதவி விலகியதில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இராணுவ ஆட்சியாளர் ஒருவருக்கு நாட்டை ஒப்படைப்பது பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தும் எனவும் 40 ஆண்டுகால அரசியல் அனுபவமுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார.; அம்பாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா ஆட்சிப்பீடமேறினால் ஒருபோதும் பதவி விலகமாட்டார் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக