வெள்ளி, 22 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறச் செய்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..(புகைப்படங்கள் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கிலும் தெற்கிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வதற்கான சந்தர்ப்பம் கைகூடியுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி வெற்றி பெறுவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். இன்று (22) மாலை ஊர்காவற்துறை புளியங்கூடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஈ.பி.டி.பி.யின் தீவக வலயப் பகுதிக்கான அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தைகள் மூலமும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான நிலைமைகள் கைகூடியிருந்த போதிலும் யுத்தத்தின் மூலம் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்று போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்த சுயலாபத் தலைமைகள் அடுத்த கட்ட யுத்தத்திற்குத் தயாரிப்புச் செய்யும் காலமாகவே போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய - இலங்கை ஒப்பந்த காலம் வரை மட்டுமே ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரு அரசாங்கங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை எமது மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கான சிறந்ததொரு தளமாகப் பயன்படுத்தியிருக்க முடியும் எனத் தெரிவித்ததுடன் அந்த அரிய வாய்ப்பைத் தவற விட்டதுமல்லாமல் அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்புக்களையும் அப்போதைய தமிழ் தலைமைகள் தவறவிட்டதன் பலனே எமது மக்களின் இன்றைய அவலத்திற்குக் காரணமாகும் என்றும் தெரிவித்தார். பயங்கரவாதத்தை நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டு வருவதற்குப் படையினரும் பொதுமக்களும் மிகுந்த விலை கொடுத்துள்ளதாகவும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இன்றுள்ள அமைதிச் சூழ்நிலையில் ஒருபோதும் எவருக்கும் தாரைவார்க்கக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சரத் பொன்சேகாவிடம் தமிழ் மக்களுக்குப் பெரிதாக ஒன்றைப் பெற்றுக் கொடுக்கப் போவது போல் கூட்டமைப்பு அவருடன் இணக்கப்பாடு கண்டுள்ளதாக வெளியான செய்திகள் வெறும் பசப்பு வார்த்தைகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டமைப்பினரும் பதிலுக்கு ஜே.வி.பி.யினரும் அத்தகைய ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாம் ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்திக்கு என ஈ.பி.டி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள 10 அம்சத் திட்டத்தை ஜனாதிபதி கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தீவகப் பொறுப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்திரி அலென்டின் ஜுட் ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக