செவ்வாய், 26 ஜனவரி, 2010

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு..!!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றையதினம் அதிகாலை 2.00மணிமுதல் 4.00மணிவரை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், தேர்தல் வன்முறைகளை சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதட்டம் நிலவுவதுடன், அங்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊரடங்கு உத்தரவானது இன்றுமாலை 7.00 மணிமுதல் அமுலுக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சாவகச்சேரி, சுன்னாகம், மானிப்பாய், கோண்டாவில், கொழும்புத்துறை, வட்டுக்கோட்டை, நல்லூர் போன்ற 13 பிரதேசங்களில் இன்றுஅதிகாலை 2.45முதல் 4.00 மணிக்குள் கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது நல்லூரில் கடையொன்று கைக்குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்கள் இரண்டு சேதமானதாகவும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் காரியாலயமும், ஆவரங்காலிலுள்ள அவரது சாரதியின் வீடும் நேற்றிரவு தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக