செவ்வாய், 26 ஜனவரி, 2010

தேர்தலின்போது மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயம்...!

தேர்தலின்போது மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு 1 என்றும் இரண்டாமவருக்கு 2 என்றும் மூன்றாமவருக்கு 3 என்றும் அடையாளமிடலாம். முதலாவது வேட்பாளரைத் தெரிவுசெய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்புவாக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக