செவ்வாய், 26 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவுகள் 70வீதம் இடம்பெற்றுள்ளது..!

நிறைவேற்று அதிகாரமுடைய 06வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் இன்றுகாலை 7.00மணி தொடக்கம் மாலை 4.00வரை நடைபெற்றுள்ளது. இம்முறை தேர்தலில் 1கோடி, 40லட்சத்து 88ஆயிரத்து 500பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடளாவிய ரீதியலி 11ஆயிரத்து 98வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்றன. சுமார் 70வீதமானோர் நாடளாவிய ரீதியில் இன்று வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இன்றுமாலை 4.30அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வாக்கெண்ணும் பணிகள் இரவு 8.30க்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. மாவட்ட ரீதியில் விகிதாசாரத்தைப் பார்க்கும்பொழுது, நுவரெலியா 71வீதம், குருநாகல் 73வீதம், மாத்தளை 75வீதம், கொழும்பு 65வீதம், அனுராதபுரம் 65வீதம், திருமலை 72 வீதம், இரத்னபுரி 75வீதம், அம்பாந்தோட்டை 71வீதம், காலி 71வீதம், யாழ்ப்பாணத்தில் 18வீதம் (இடம்பெயர்ந்தோர் வாக்காளர்கள் தவிர்த்து) மட்டக்களப்பு 60வீதம், மன்னார் 50வீதம், வவுனியா 32வீதம், கிளிநொச்சி 32வீதம், முல்லைத்தீவு 8.4வீதம் என வாக்களிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக