வெள்ளி, 29 ஜனவரி, 2010

தமிழ் மக்களின் மனங்களை வெல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் வி.முரளிதரன் தெரிவிப்பு..!!

பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றின் முன்னர் நிறுத்த சர்வதேசம் எதிர்பார்த்திருந்ததாக அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் வெற்றிபெற்றிருப்பதானது சர்வதேச சமூகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல பாடமென அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி தமிழ் பிரதேசங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள அவர், தமிழ்ப் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாகக் கிடைத்தமைக்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்படுத்திய துரோகமேயெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தத் தேர்தல்மூலம் தமிழ்மக்களின் மனங்களை வெல்வதற்கான வேலைத்திட்டங்களை வடிவமைக்க வேண்டுமென்பதை ஜனாதிபதி உணரவேண்டிய தேவையேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக