வெள்ளி, 29 ஜனவரி, 2010

தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதிக்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைத்தன-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!!

தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் ஊடகங்கள் பிரதேசமக்களை பிழையான வழியில் இட்டுச்சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என சில ஊடகங்கள் அறுதியிட்டுக் கூறின. மேலும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழும் தங்களது உறவினர்களின் நிதியுதவியைப் பெற்றுவாழ்கின்றனர். ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு விசுவாசமான சில இராணுவஅதிகாரிகளே குடாநாட்டில் குண்டுகள் வெடிக்கக்காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தல்களில் தமது வாக்குப்பலத்தை பரீட்சிக்க இத்தேர்தலை பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக