வெள்ளி, 29 ஜனவரி, 2010

வடக்கு கிழக்கு மக்கள் சுயாமாக வாக்களிக்கும் ஜனநாயகம் மீளக்கிடைத்தமை மகிழ்ச்சியை தருகிறது -ஜனாதிபதி தெரிவிப்பு..!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப் பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று மாலை ஊடகத்துறை பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமது நாற்பது வருட அரசியல் பயணத்தில் கீழ்தரமான இகழ்வான தேர்தல் ஒன்றிற்கு கடந்த நாட்களில் முகம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இனவாதம் மீண்டும் எழுப்பப்பட்ட போதும் பயங்கரவாதம் மறுவடிவம் பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஊடகங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப் பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக