வெள்ளி, 15 ஜனவரி, 2010
வன்னிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு..!!
யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிவந்த ஆசிரியர்கள் வன்னி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் அவர்களில் சிலர் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே திரும்பியுள்ளனர். யுத்த காலத்தின்போது யாழ். சென்று அங்கு தற்காலிகமாக சேவையில் ஈடுபட்டுவந்த இவர்கள் இம்மாதம் முதலாம் திகதி கிளிநொச்சிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 90பாடசாலைகள் இருந்தநிலையில் தற்போது அவற்றில் 06பாடசாலைகளிலேயே கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதன் காரணத்தினால் அந்தப் பாடசாலைகளுக்குரிய ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள பாடசாலைகளில் தமது தற்காலிக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரியவருகிறது,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக