வெள்ளி, 15 ஜனவரி, 2010
மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்தவன் நான் கெம்பல் பார்க்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு..!!
ஒருபோதும் தன்னால் முடியாததொன்றை தான் கூறியதில்லை என்றும் ஏழைமக்களின் இதயத்துடிப்பை நான் நன்றாக அறிந்து நாட்டின் முன்னேற்றத்துக்காகவே எப்போதும் சிந்தித்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 90முதல் 94சதவீதம் வரை நான் நிறைவேற்றியுள்ளேன். இந்த தடவை 100 வீதம்வரை முடிப்பேன் என்னால் முடியாததை நான் ஒருபோதும் மேடைகளில் கூறியதில்லை என்றார். பிரதி மேயரும் ஐ.தே.கட்சி செயற்குழு உறுப்பினருமான அசாத் சாலியும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றியமையும் குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக