இணையத்தில் வங்கி அட்டைகள் தொடர்பான குற்றங்களுக்கு பெயர்போன டார்க்மார்கெட் (DarkMarket) என்ற தளத்தை இயக்கியவர்களில் முக்கிய சூத்திரதாரியான இலங்கையர் ஒருவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ரேணுகாந் சுப்ரமணியம் என்ற 33 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் போன்றனவற்றை இணையமூடாக மோசடியாக பரிமாறுவதற்கு குறித்த நபர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு போலியான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோணுகாந் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும், 2002ம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இணைய குற்றங்களுக்கு பெயர்போன டார்க்மார்கெட் (DarkMarket) மூலம் பயனர்களில் அடையாளங்களைத் திருடுதல், வங்கி அட்டைகள் மற்றும் கடன் அட்டைகளின் தகவல்களை திருடுதல் மற்றும் உள்நுழைவு தகவல்களைத் திருடுதல் போன்ற மோசடிகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த தளத்தை ஊடுருவிய அமெரிக்க மற்றும் பிரிட்டன் புலனாய்வாளர்கள் ஒக்டோபர், 2004ல் அந்த தளத்தைத் தடைசெய்து விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக