கடந்த 19ம் திகதி வவுனியா வடக்குப் பிரதேசமான நெடுங்கேணிக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். புளொட் தலைவர் சித்தார்த்தனுடன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான வை.பாலச்சந்திரன், புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். (தகவல் புகைப்படங்கள்.. புளொட் ஊடகப்பிரிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக