சனி, 23 ஜனவரி, 2010
13 சர்வதேச நாடுகளின் கண்காணிப்புக்குழுக்கள் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பங்கேற்பு..!!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 13சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 40கண்காணிப்புக் குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த 40கண்காணிப்புக் குழுக்களும் நாட்டின் 25மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமது கடமைகளை மேற்கொள்வரென்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கண்காணிப்புக்குழுவினர் நாட்டிலுள்ள 11ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழுவினரின் அறிக்கை எதிர்வரும் 28ம் திகதி சமர்ப்பிக்கப்படுமென்று கூறப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக