சனி, 16 ஜனவரி, 2010
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை -ஜனாதிபதி தெரிவிப்பு..!!
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றினால் வடக்கு கிழக்கில் பொலிஸ் நிலையங்களையும் அகற்ற நேரிடுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை இணைத்து குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அதிகாரங்களை வேறு பிரிவினருக்கு வழங்கினால் அதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடுமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாகவே தீர்மானங்களை மேற்கொண்டேன் என பொரளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் தலைவர் என்ற ரீதியில் சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டதாகவும் எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்பட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கராம மக்களைப் போன்றே நகரமக்களின் வேதனைகளையும் அறிந்து செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக