சனி, 16 ஜனவரி, 2010

நேற்று அம்பாறையில் சரத் பொன்சேகாவின் காரியாலயங்கள் மீது தாக்குதல்..!!

ஜனாதிபதியின் நேற்றைய வருகையை ஒட்டி அம்பாறை மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான காரியாலயங்கள் பல நேற்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஜே.வி.பியின் மாவட்ட காரியாலயம் தாக்கப்பட்டுள்ளது இதில் அந்த காரியாலயம் முற்றாக சேதமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அம்பாறை உகன பிரதான வீதியில் 2ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஜே.வி.பியின் காரியாலயம் நேற்று அதிகாலை 1.00மணிக்கு தாக்கப்பட்டுள்ளது காரியாலயத்துக்கு பாரியசேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதற்கிடையில் ஹிமுதுராவ மஹா கண்டிய தபால் சந்தியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயமும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எரகம வரிப்பத்தான்சேன காரியாலயமும் கல்மடுவ சந்தியில் உள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான காரியாலயத்துக்கு அருகில் உள்ள போஸ்டர்கள் மற்றும் பெனர்கள் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஹிங்கினியா கல்சல்கஸ் சந்தியிலும் ஹிங்கினியாகலை அலிஒலுவ சந்தியிலும் மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது காயமடைந்த சரத்பொன்சேகாவின் இரண்டு ஆதரவாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஜனாதிபதியின் இன்றைய வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சுமார் 4000 இராணுவத்தினரும் 2000க்கும் அதிகமான பொலிஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக