திங்கள், 11 ஜனவரி, 2010

புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட்டு வருகிறது -ஜே.வி.பி.தலைவர்..!!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் ஆலோசனையின் பேரில் புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் கல்வி மற்றும் சுகாதார துறைகளை அவரே நேரடியாக கண்காணிப்பார் என சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவின் ஆட்சியின் கீழ் இலங்கையில் புதிய சகாப்தமொன்று உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்ற கருத்து விரைவில் தகர்தெறியப்படும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை கட்டியெழுப்பி நல்லாட்சியை ஏற்படுத்துவதே தமது பிரதான இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக