பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 தமிழ் இளைஞர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் பஸ் வண்டிகளில் பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை நாளை வெள்ளிக்கிழமையும் மேலும் இன்னொரு தொகுதி கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக