வியாழன், 21 ஜனவரி, 2010

ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும், தொழிலாளர் வர்க்க வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுமே சரத் பொன்சேகா களமிறங்கியுள்ளார் -மட்டு மாநகரமேயர் சிவகீதா..!

இந்நாட்டிலே அழிக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்குமே ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடுசெய்த தேர்தல் பிரசாரக் கூட்டம் மருதமுனை மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றியபோதே ஹரீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு துருவங்களாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவையும் ஒரேமேடையில் பேசவைத்து இந்நாட்டிலே ஜனநாயக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக எமது தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடுகிறார். எமது தலைவர் எடுத்த சரியான முடிவினால் காய்கள் சரியாக நகர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் பல அரசியல் தலைவர்கள் நாளுக்குநாள் மந்திர ஆலோசனை செய்து எமது அணியில் இணைந்து வருகிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு பின்னர் அந்த மக்களை அகதிமுகாம் என்ற பெயரிலே சிறைவைத்ததைத் தமிழ்சமூகம் நன்றாக உணர்ந்துள்ளது. எமது தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ்மக்கள் மத்தியில் நேர்மையான ஒரு அரசியலைச் செய்கின்றவர். அவர் முன்னிலைப்படுத்தியிருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்மக்களின் ஆதரவுடன் நிச்சயம் வெற்றிபெறுவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக