சனி, 23 ஜனவரி, 2010
தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களை எதிர்வரும் 24ம்திகதி நள்ளிரவுக்குள் அகற்றுமாறு அறிவுறுத்தல்..!!
எதிர்வரும் 24ம் திகதி நள்ளிரவுக்குள் தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களை அகற்ற வேண்டுமென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய சகல கட்சிகளுக்கும் அறிவித்துள்ளார். இவ்வாறு பிரச்சார காரியாலயங்கள் அகற்றப்படாத பட்சத்தில் பொலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அத்துடன் தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களை அகற்றத் தவறுவோர்க்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதிலும் பதிவுசெய்யப்பட்ட 9294 தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 60.31தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், புதிய ஜனநாயக முன்னணியின் 1831தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும் அடங்குகின்றன. அத்துடன் 692ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், 117ஜே.வி.பியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும் பதிவுசெய்யப்பட்டு இயங்கிவருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை வாக்காளர் அட்டைகளை புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பொலீசாரோ கேட்கும் பட்சத்தில் அவற்றைக் கொடுக்க வேண்டாமென்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக