வெள்ளி, 22 ஜனவரி, 2010

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஹெல உறுமய கட்சியினர் சவால்..!!

முடிந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக ஊடகங்களின் முன்னிலையில் வந்து உறுதியளிக்குமாறு ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஹெல உறுமய கட்சியினர் சவால் விடுத்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை அவர்களால் ஒருபோதும் காப்பாற்ற முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ஜனநாயகத்துடன் ஆட்சி செய்யக்கூடிய ஒரு தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாத்திரமேயென சூழல் மற்றும் இயற்றை வளங்கள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக