செவ்வாய், 15 டிசம்பர், 2009

தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு ஜே.வி.பி.சவால் !

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த சவாலை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ளார். இந்த விவாதம் போர் உட்பட பல்வேறு தலைப்புகளில் அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தமது கைபெருவிரலை காட்டிய சரத்பொன்சேகா தாம் அவ்வாறான விவாதம் ஒன்றுக்கு தயார் என தெரிவித்தார். இதேவேளை கொழும்கு ஜெய்கில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற சரத்பொன்சேகாவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. அரச ஊடகமான டெய்லி நியுஷின் கூட்டு ஆசிரியர் ஒருவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு சென்ற போதும் அவர் திருப்பியனுப்பப் பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக