செவ்வாய், 15 டிசம்பர், 2009
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது -சரத்பொன்சேகா தெரிவிப்பு !
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என தாம் கூறவில்லையென எதிர்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவே சரணடைந்த விடுதலைப்பலிகளை கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஞாயிறு ஆங்கில இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையில் குறித்த செய்தித்தாள் தமது கருத்தை திரிவுபடுத்திக் கூறியிருப்பதாக சரத்பொன்சேகா இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார் செய்தித் தாளுடனான செவ்வியின் போது நோர்வேயின் ஊடாக கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்து அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முற்பட்டவர்கள் குறித்து பஷில்ராஜபக்ஷவும், கோத்தபாயராஜபக்ஷவும் என்ன செய்தார்கள் என தம்மிடம் கேள்வி கேட்கப்பட்டது இதற்கு இதுதொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும் பின்னர் ஊடகங்களில் வெளியான செய்திகளிலேயே தாம் தெரிந்துக்கொண்டதாகவும் செய்தித்தாளுக்கு பதிலளித்ததாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ஊடகங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோரில் ஒருவர் வழங்கிய செவ்வியிலயே நோர்வேயின் முனைப்புக் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் உயர் இராணுவ தளபதி ஒருவருக்கு வெள்ளைக்கொடியுடனோ அல்லது கொடி இன்றியோ வரும் புலி உறுப்பினர்களை தப்பிக்கவிடவேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக ஊடகங்களின் மூலம் தாம் அறிந்துக் கொண்டதாக குறித்த செவ்வியில் பதில் வழங்கியதாக தெரிவித்த அவர் எனினும் இதனை அந்தஊடகம் திரிவுபடுத்தி வெளியிட்டிருப்பதாக சரத்பொன்சேகா மேலும் தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக