புதன், 30 டிசம்பர், 2009
ஓசியானிக் வைக்கிங் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் வலியுறுத்தல்..!!
ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து தரையிறங்கி இந்தோனேசியா தடுப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு மீண்டும் வலியுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த கப்பலில் இருந்து தரையிறங்கிய 78பேரில் 15பேர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குடியமர்த்தப்பட்டனர். இரண்டுபேர் அவுஸ்திரேலியாவிலும் 13பேர் கனடாவிலும் குடியமர்த்தப்பட்ட நிலையில் எஞ்சிள்ள 63பேர் தொடர்பில் அவுஸ்திரேலியா சரியான முன்னெடுப்பை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த வலியுறுத்தலை அவுஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் சாராஹ் ஹன்சன் யங் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அவர்கள் எங்கு அனுப்பப்படவுள்ளனர் மற்றும் அவர்களை பொறுப்பேற்க ஏனைய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தல் போன்ற அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். புதுவருடம் ஆரம்பிக்கும் நிலையில் அவர்கள் தொடர்பில் ஒருபுதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதேவேளை அவர்களை காலம் தாழ்த்தாது அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவுஸ்திரேலியா வழங்கிய உறுதிமொழி பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக