புதன், 30 டிசம்பர், 2009

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான மின்சாரத் தந்தியிணைப்புப் பணிகள் 2013ல் நிறைவுறுமென எதிர்பார்ப்பு..!!

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான மின்சாரத் தந்தியிணைப்பு வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வருடம் 2013ம் ஆண்டு நிறைவடையுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 50கிலோமீற்றர் கடலுக்கடியிலான மின்இணைப்பு உள்ளிட்ட 285கிலோமீற்றர் தூரத்திற்கான மின்இணைப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்குமிடையிலான மின்சார வர்த்தக விஸ்தரிப்பின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இரு நாடுகளுக்குமிடையில் 2300கோடி பெறுமதியான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக