புதன், 30 டிசம்பர், 2009

யுத்தத்தின்பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்ககப் பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை..!!

இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்ககப்பட்டுள்ளவர்களுள் 738பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நிவாரணக் கிராமங்களில் இருந்தபோது விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்களுள் 700பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38பேருமே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் தடுத்துவைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுவிக்கப்பட்டவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒருமாதத்தில் குறைந்தது 100பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புலிகள் இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் தவிர இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும்நிலையில், 700பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர். இவர்களை மீளக்குடியர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக