இலங்கையின் 6வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் 5வது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை தமது கட்சி முழுமையாக ஆதரிப்பதாக சிறீ-ரெலோ செயலாளர் உதயராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. சிறீ-ரெலோ கட்சியின் இத் தீர்மானத்தை செவ்வாய் கிழமை (26, செப். 2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்த சிறீ-ரெலோ செயலாளர் உதயராசா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான தமது தீர்மானத்தை தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சிறீ-ரெலோ கடந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் அவ்வாறான `கூட்டு வேலைத் திட்டம்` அவசியமென தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக