இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் உள்வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக