திங்கள், 30 நவம்பர், 2009
ஜெனரல் சரத்பொன்சேகா தலதாமாளிகைக்கு விஜயம்..
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத்பொன்சேகா இன்று கண்டி தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மற்றும் அஸ்கரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 20ஆண்டுகளுக்கு முன்னர் தீர்வாக முன்வைக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் இந்தக் காலகட்டத்திற்கு பொருத்தமற்றதென தெரிவித்துள்ளார். தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். பலம் வாய்ந்த பல கட்சிகள் குறிப்பிட்டதன் காரணமாக இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை எட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக