செவ்வாய், 1 டிசம்பர், 2009
இன்று டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாகும்!!
இன்று டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாகும். உலகில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1981இல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனையடுத்து இவ்வருடம் டிசம்பர்மாதம் வரை 33மில்லியன் பேர் ர்ஐஏஃயுஐனுளு தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அபிவிருத்தியடையும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987ல் இனங்காணப்பட்டார். 2009 செப்டெம்பர் மாதமளவில் எமது நாட்டில் 1161 ர்ஐஏ+ நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் யுஐனுளு நிலைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 302ஆகும். இந்த வைரஸினால் உயிரிழந்தவர்கள் 197பேர். இதில் 41பேர் சிறுவர்கள். எமதுநாட்டில் தற்போது 3800 – 4000 ர்ஐஏ + நோயாளர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முறையற்ற பாலியல் நடவடிக்கைகள்மூலமே நம்நாட்டில் ர்ஐஏ தொற்று ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை ர்ஐஏ தொற்றுக்கு உள்ளாகிய 184 நோயாளிகள் யுசுஏ எனும் எதிர்ப்பு மருந்து வகைகளை பாவிக்கின்றனர். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு, தேசிய நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இலங்கை எயிட்ஸ் நோயாளிகள் குறைந்தவொரு நாடாக கருதப்படுவதாகவும் அதற்கு எங்கள் நாட்டு மக்களின் கல்வியறிவும், கலாசாரம் சக்திமிக்கதாகவும் அமைந்துள்ளதே காரணம் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்திய அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் இதற்கு பிரதான காரணமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக