புதன், 2 டிசம்பர், 2009
சுனாமியின் போது காலியில் காணாமற் போன பெண் 5வருடங்களின்பின் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு..
2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது காலி ஹிக்கடுவை பெரலிய பகுதியில் வைத்து காணாமற் போன பெண்ணொருவர் ஐந்து வருடங்களின் பின்னர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இரத்தினபுரி பிரதேசத்தில் வைத்து இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை இரத்தினபுரி பகுதியில் வைத்து அவரது நண்பர்கள் கடந்த தினங்களுக்கு முன்னர் கண்டதையடுத்து அவரது பெற்றோர் இரத்தினபுரி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இன்றையதினம் குறித்த பெண்ணை பொலீசார் கண்டுபிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தபோது பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். பொலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பெண் சுயநினைவு அற்றநிலையில் இருந்ததாகவும், பெண்ணின் காலில் இருந்த தழும்பினை வைத்து பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுனாமி அனர்த்தத்தின்போது அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்தமை மட்டுமே குறித்த பெண்ணின் நினைவில் இருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக