புதன், 2 டிசம்பர், 2009

பறவைக் காய்ச்சல் காரணமாக பிரான்ஸிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்..

பறவைக் காய்ச்சல் அபாயத்தை முன்னிட்டு பிரான்ஸிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்வதை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச விலங்கு வளர்ப்பு மற்றும் சுகாதாரத் திணைக்களம் பறவைக் காய்ச்சல் பரவுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வெளிநாட்டுக் கோழிஇறைச்சி இறக்குமதிகளையும் இலங்கை தடைசெய்ய வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக