திங்கள், 30 நவம்பர், 2009

தமிழ்க்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி செல்வராஜா கஜேந்திரன் நாடு திரும்பினார்..

தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். இவர் கடந்த 3வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இப்போது தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தி மாத்திரம் தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40இ000க்கு மேற்பட்ட சவப்பெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார். பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில்இ மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40இ000 சவப்பெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமிழ்க் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக