திங்கள், 30 நவம்பர், 2009
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றுமுதல் தமது கட்டுப்பணத்தை செலுத்தமுடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு..
எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள 06வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றுமுதல் தமது கட்டுப்பணத்தை செலுத்தமுடியும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர் 50ஆயிரம் ரூபாவையும், சுயேட்சைக் குழுவிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் 75ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். மேலும் எதிர்வரும் 16ம் திகதி நண்பகல் 12மணிவரை வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தமுடியும். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இன்றுமுதல் அனுப்பிவைக்க முடியும். இன்றுமுதல் எதிர்வரும் 07ம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வாக்காளர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என்றும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக