வியாழன், 26 நவம்பர், 2009
வவுனியா தடுப்பு முகாமில் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர் மூவர் கைது..
வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூன்று தமிழர்களை மன்னார் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்கள் என தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தே நேற்றுமுன்தினம் மாலை அடம்பன் மற்றும் பரப்பகண்டல் பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனியின் வாகன ஓட்டுநராகவும் அடுத்தவர் புலிகளில் வாகன ஓட்டுனராகவும் மூன்றாமவர் புலிகளில் அரசியல்பிரிவின் முக்கியஸ்தர் என்றும் தமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தது. மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக