வியாழன், 26 நவம்பர், 2009

யாழ்பாணத்திற்கான பஸ்சேவை அதிகரிக்கப்படுகிறது...

இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்பாணத்திற்கு பிரயாணம் செய்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்திருப்பதன் காரணமாக மேலும் பஸ்களை சேவையில் ஈடுபட்டத்தவுள்ளதாக இ.போ.ச தெரிவித்துள்ளது. ஏ9 பாதையில் பிரயாணிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து பஸ்களை அதிகரிக்கக் கோரி தங்களுக்கு இரண்டாயிரம்பேர் கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்ததோடு கொழும்பிலிருந்து யாழ்பாணம் செல்வதற்கான 11 மணிநேரப் பிரயாணத்திற்கான கட்டணங்களாக அரை சொகுசு சேவைக்கு 550 ரூபாய் அறவிடப்படுவதாகவும் இ.போ. சபையின் பஸ்கள் 350 ரூபாயை அறவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ9 பாதை தவிர யாழ்பாணம் செல்வதற்காக விமான சேவை சென்றுவருவதற்கான இருவழிக்கட்டணமாக ரூபா.22,000 அறவிடுவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக