வியாழன், 26 நவம்பர், 2009
வவுனியாவில் இயங்கிய போலிக் கச்சேரி முற்றுகைக்குள்ளானது...
வாகனங்களைப் பதிவு செய்தல், வாகனச்சாரதிப் பத்திரம் போன்றவற்றிற்காக போலி ஆவணங்களைப் தயாரித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது காரியாலயம் பொலிஸாரின் முற்றுகைக்குள்ளாகி அங்கிருந்து பெருந்தொகையான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. வன்னி விடுவிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்கள் வவுனியாவில் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து இயங்கிவந்துள்ள குறிப்பிட்ட போலிக் கச்சேரியில் பல்வேறுபட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் கடந்தகாலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான போலிப் பத்திரங்கள் இங்கிருந்து தயாரிக்கப்பட்டனவா எனவும் விசாரணைகள் தொடர்கின்றன.அத்துடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் களவாடப்பட்ட வாகனங்களுக்கான போலிப் பத்திரங்கள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக