வியாழன், 26 நவம்பர், 2009

பூநகரி கிராம சேவையாளர் பிரிவுகளில் 3000ற்கும் அதிகமானோர் மீள்குடியமர்வு..

கிளிநொச்சியின் பூநகரி பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வகையில் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் உள்ள எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை 1156குடும்பங்களைச் சேர்ந்த 3987பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபற்றி கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், முழங்காவில், நாச்சிக்குடா, உதயபுரம் வடக்கு, உதயபுரம் தெற்கு மற்றும் பல்லவராயன்கட்டு உள்ளிட்ட எட்டு கிராமசேவையாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடிமயர்த்தப்பட்டுள்ளனர். இன்றும் 340 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்குரிய உதவிகளை வழங்கவும், நாச்சிக்குடா மீனவக் குடும்பங்களுக்கு தமது தொழிலுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவ்வருட நிறைவுக்குள் கணிசமானளவு மக்கள் கிளிநொச்சியில் மீளக்குடியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக