வியாழன், 26 நவம்பர், 2009
2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 1கோடி 40லட்சத்து 88ஆயிரத்து 500பேர் வாக்களிக்கத்; தகுதி..
ஜனாதிபதித் தேர்தல், 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி நடத்தப்படவுள்ளதோடு இத்தேர்தலில் 1கோடி 40லட்சத்து 88ஆயிரத்து 500பேர் வாக்களிக்கத்; தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க அடையாளஅட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அடையாளஅட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல் திணைக்களமும், ஆட்பதிவுத் திணைக்களமும் தற்காலிக அடையாளஅட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேற்றப்பட்டுவரும் மக்கள் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 1கோடி 33லட்சத்து 27ஆயிரத்து 160பேர் தகுதிபெற்றிருந்தனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் 7லட்சத்து 61ஆயிரம் பேர் கூடுதலாக வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இம்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் வடக்கு, கிழக்கு உட்பட சுமார் 26லட்சம் பேருக்கு அடையாளஅட்டை இல்லையென ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்காக 2010ம் ஆண்டில் மட்டும் செல்லுபடியாகக் கூடியவாறு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள பிரதிஆணையாளர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக