வடபிராந்திய போக்குவரத்து சபையினால் கிளிநொச்சியில் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இயங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ திறக்கப்படவுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் தற்சமயம் மீள்குடியமர்த்தப்படும் நிலையில் ஆரம்பிக்கப்பட விருக்கும் போக்குவரத்து சேவையானது பெரும் நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிளிநொச்சி இ.போ.ச டிப்போவிற்கு 5 பஸ்கள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக இந்த பஸ்கள் கிளிநொச்சிக்கும் - வவுனியாவிற்கும் இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை வடமாகாண அரச அதிகாரிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு விசேட போக்குவரத்து சேவைகளும் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி யாழ்ப்பாணத்தின் இருந்து பரந்தன் ஊடாக துணுக்காய்க்கும், வவுனியாவில் இருந்து மாங்குளம் ஊடாக துணுக்காய்க்கும் பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக