சனி, 28 நவம்பர், 2009
இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது, நால்வா பலி!
இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று மொனறாகலை மாவட்டம் புத்தள துங்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சி நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோதே, குறித்த விபத்து துங்கிந்த காட்டுப்பகுதியில் வைத்து ஏற்பட்டுள்ளதாக விமானப்படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக