சனி, 28 நவம்பர், 2009

பிரபாகரனைப் புகழ்ந்த இயக்குநர் சீமான் இரவோடிரவாக கனேடிய அரசினால் நாடு கடத்தப்பட்டார்!

இலங்கையில் புலிகள் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டதையடுத்து கைவிடப்பட்ட நிலையிலுள்ள புலிகள் இயக்கத்தை புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி முக்கியஸ்தர்கள் பண வருவாயை நோக்காகக் கொண்டு அதை தொடர்ந்தும் செயற்படுத்த முனைகின்றனர். அந்த வரிசையில் சீமானை அழைத்து அவர்மூலம் செத்துப்போன புலிகளுக்கு உயிரூட்டும் முயற்சிக்கு கனேடிய அரசு உடனடியாக ஆப்பு வைத்துவிட்டதாக கனேடிய ஊடகச்செய்திகள் கூறுகின்றன. புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று போலி பரப்புரை செய்யும் முயற்சியில் இறங்கியிருந்த டைரக்டர் சீமான் கனேடிய குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் மாவீரர் நாளை முன்னிட்டு கனடா சென்றிருந்த திரைப்பட இயக்குனர் சீமான் நேற்று ரொறன்ரோவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக புலிகளை ஆதரித்து பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக