வெள்ளி, 13 நவம்பர், 2009
மலேசியாவில் 2 நிறுவனங்களில் 10 வயது சிறுவனுக்கு தலைமை அதிகாரி பதவி...
மலேசியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அதிபுத்ரா அப்துல்கானி. இந்த சிறுவனின் தாயார் “வைட்டமின்” பொருட்கள் தயாரிக்கும் 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த இரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக அதிபுத்ரா அப்துல்கனியை நியமித்து உள்ளார்.ஏதோ மகன் என்ற பாசத்திற்காக இந்த சிறுவனுக்கு தாயார் பதவி கொடுக்கவில்லை. தொழில் விஷயத்தில் அனைத்து நுனுக்கங்களையும் தெரிந்து வைத்துள்ளான். சிறந்த நிர்வாக திறனும் இருக்கிறது. இதை பார்த்துதான் தாயார் அவனுக்கு பதவி வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் இவன் 4-ம் வகுப்போடு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டான்.இவனுடைய அறிவு திறனை பார்த்து மலேசிய பல்கலைக்கழகங்கள் அவனை அழைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவு நடத்த வைத்துள்ளன. 1 மணி நேர சொற்பொழிவுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் வாங்குகிறான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக