
வடபகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு வசதிகளுக்கான நிதியுதவியை வழங்க ஜப்பான அரசாங்கம் முன்வந்துள்ளது. ஜப்பான் தூதுவர் குனியோ தகாசியால் இதற்குரிய நடவடிக்கை தேசிய காங்கிரஸ் தலைவரும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களுக்கு மிக அவசரமாக தேவையானதான குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு நிலைமைகளை விருத்தி செய்வதற்காக அமைச்சர் அதாவுல்லாவின் வேண்டுகோளின் பேரில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக ஜப்பான் தூதரகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இச்செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச ஜப்பான் ஒத்துழைப்பு முகவராண்மை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஜப்பானிய நிபுணத்துவர்களை வழங்குவதற்கு முக்கியமான பங்கினை எடுத்துள்ளது. ஜப்பான அரசு இல்ஙகை அரசுக்கான உணவு மானிய உதவியின்கீழ் இரண்டு ஒகீ நிதியிலிருந்து 263.0மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலங்கையரசு 23மில்லியன் ரூபாவை உள்நாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளது. வவுனியா, யாழில் தற்போது வசிக்கும் மக்களின் நலன்கருதி இத்திட்டத்தை இலகுவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மெனிக்பாம், உளுக்குளம், சுமதிபுரம், மஹகங்கொஸ்கொட மற்றும் வீரபுரம் போன்று வவுனியா மாவட்ட நிலையங்களும் வீரகவில், மிருசுவில் மற்றும் கைதடி போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள முகாம்களும் உள்ளடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக